ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தெரிந்த பலருக்கு சரியாக எழுதத்தெரியாது.
இனி அந்த கவலையே வேண்டாம்.
பள்ளி முதல் கல்லூரி வரை, அலுவலகங்கள் முதல் சொந்த பந்தங்கள் வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி எளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.
தமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ் நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறினால் சற்று யோசித்து எழுதுகின்றனர்.
அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ அல்லது அரசுக்கோ கடிதம் எழுத கூறினால் அவர்கள் கூறும் முதல் வார்த்தை எங்களுக்கு அனுபவம் இல்லை என்று, அனுபவம் இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதினால் இலக்கண பிழை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.
ஆங்கிலத்தில் இனி எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம் நமக்கு உதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி :
இந்த தளத்திற்க்கு சென்று நம் பெயரைக் கொடுத்து எளிதாக எந்த கடிதம் வேண்டுமானாலும் உருவாக்கலாம். சம்பிரதாய கடிதங்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க நமக்கு ஒவ்வொரு படியையும் கையைப்பிடித்து அழைத்துச்செல்கிறது.
எந்த இடத்தில் எதற்க்காக என்ன பெயர் கொடுக்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் சம்பள உயர்வுவேண்டும் என்றால் எப்படி கடிதம் எழுத வேண்டும் யாருக்கு எந்த பதிவியில் இருப்பவர்களுக்கு எழுதவேண்டும், எதை மையப்படுத்தி நாம் கேட்க வேண்டுவதை ஆங்கிலத்தில் எப்படி எல்லாம் எளியமுறையில் இலக்கண பிழை இல்லாமல் எழுதலாம் போன்ற அத்தனை தகவல்களையும் கொண்டு நம்மை ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் எழுத உதவுகிறது. பார்ப்பதற்க்கு எளிதாக எந்த விளம்பரமும் இல்லாமல் தெரிகிறது. கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்
நன்றி
http://eravurinfo.blogspot.com
நன்றி
http://eravurinfo.blogspot.com
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குHere are a bunch of unique sample letter that can be customized to suit your needs.
பதிலளிநீக்குhttp://www.aboutletterwriting.com